தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

சிற்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜூலை, 2025

பாதாமி சாளுக்கியர் கால சில வியப்புக்கள்


ரிஷப குஞ்சர சிற்பங்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்கும் போது, அவை முதன் முதலில் பாதாமி சாளுக்கியர் காலத்தில் அய்கொளேயில்(கர்நாடகா) செதுக்கப்பட்டன எனத் தெரிந்து கொண்டேன்.  பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சி, அவர்களது கட்டடக்கலை, சிறப்புமிக்க பாதாமிக் குடவரைகள், பாதாமி சாளுக்கியர்களின் காலத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பற்றிய விவரங்கள்,  அவர்களுக்கிடையில் நிகழ்ந்த போர்கள் என விரிவான சித்திரம் கிடைத்தது.  (இந்தப் பதிவுடன் தொடர்புடைய முந்தைய பதிவு - ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்)

பாதாமி சாளுக்கியர்களின் கலை படைப்புகளின் உச்சம் எனக் கருதப்படும் பாதாமி, அய்கொளே, பட்டடதக்கல் போன்ற இடங்களில் உள்ள குடவரைகள் மற்றும் கட்டடங்களைப் பற்றி படிக்கையில் ஒரு சில அம்சங்கள் வியப்பாக இருந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.

கூரை அமைப்புகள்


பெரும்பாலான பழைய கற்கட்டடங்களின் கூரைகள் சமதளத்துடன் இருப்பதையே பார்த்துள்ளேன்.  முன்பெல்லாம் கோயில் மண்டபங்களுக்குள் நடக்கையில் மேலே சென்று   கற்பலகைகளை எப்படி வைத்து கூரைகள்  அமைத்துள்ளார்கள் என்றும் எப்படி மழை நீர் உள்ளே வராதபடி அமைத்துள்ளனர் எனப் பார்க்கும் ஆவல் இருந்தது.

முதன் முதலில்,  கற்கட்டடங்களின் கூரைகள் சரிவாக அமைந்திருப்பதைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்டவைகள் பாதமி, அய்கொளே மற்றும் பட்டதகல்லில்(கர்நாடக மாநிலம்) அதிகம் காணப்படுகின்றன.

புதன், 30 ஏப்ரல், 2025

அஜந்தா – எல்லோரா குடவரைகள் - பௌத்த தெய்வங்கள்



1. அறிமுகம்

புத்தரைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவானதே. பௌத்த மதம் என்றாலே புத்தர் மட்டும்தான் மற்றும் அதன் முக்கியமான அம்சம் தியானம் என்பதே என் புரிதலாக இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது, போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர் மற்றும் பல புதிய பெயர்கள் வந்தன. அவை பற்றி இணையத்தில் தேடும் போது, இன்னும் அதிக கேள்விகளே எழுந்தன.

இந்து மரபில் பல தெய்வங்களின் வழிபாடு  இருப்பது போல, பௌத்தத்திலும் நிறைய ஆண், பெண் தெய்வங்கள், யக்‌ஷர்கள், யக்ஷிகள், கணங்கள், மிதுனர்கள், வித்யாதரர்கள் இருக்கின்றனர் எனத் தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

எங்கள் அஜந்தா எல்லோரா பயணம் பற்றி, ஆலயக்கலை ஆசிரியர் ஜெயகுமார் நடத்திய இணைய வழி அறிமுக வகுப்பு, பௌத்த மதத்தைப் பற்றிய வரலாறு, பண்பாடு மற்றும் நிறைய புரிதல்களைக் கொடுத்தது. 

வெள்ளி, 14 மார்ச், 2025

எல்லோரா – இந்துக் குடவரைகள்

 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில்,  குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது.  மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.  

சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து (பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும் வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

எல்லோராவில் 100க்கு மேற்பட்ட குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.

இங்கு

13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),

16 இந்து குடவரைகள் (எண்14-29),

5 சமணக் குடவரைகள் (எண் 30-34) உள்ளன.

இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான நீளத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின் வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக் கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம் திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது. ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால் தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின் முதல் குடவரை.

செவ்வாய், 30 ஜூலை, 2024

ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்

இந்தத் தொடரின் முந்தைய பதிவுகள்


இந்தப் பதிவில்



1. ரிஷப குஞ்சரம்


ரிஷப குஞ்சரம் என்பது ரிஷபமும் யானையும் சேர்ந்த ஒரு சிறப்புச் சித்தரிப்பு. இதில் இரண்டின் தலைகளும் இணைந்திருக்கும். நாம் ரிஷபத்தின் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த இணைந்த தலை ரிஷபத்தின் தலையாகத் தெரியும். நாம் யானை உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தத் தலை யானையின் தலையாகத் தெரியும். மிக நுட்பமான மற்றும் தந்திரமான சித்தரிப்பு. இதன் சிறப்புகளை இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

இந்தியா மற்றும் இலங்கையில் இது சிலைகளாக, சிற்பங்களாக, ஓவியங்களாக மற்றும் பண்டைய அரசாங்க நாணயங்களாகவும் காணக் கிடைக்கிறது. ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இருக்கும்போது ஒரு சிற்பத்தைத் தேடுவது சிரமமே. இந்த ரிஷப குஞ்சர சிற்பத்தைச் சற்று சுலபமாக கண்டுபிடிக்க, குறிப்பாக எங்கிருக்கின்றன என்பதையும், இருக்குமிடத்தின் வரலாற்றுப் பின்புலத்தையும் முடிந்தவரை சேகரித்தேன்.

செவ்வாய், 28 மே, 2024

ரிஷப குஞ்சரம் - 1

சில சமயங்களில் நாம் ஒன்றைத் தேடும்போது சிறப்பான வேறு சிலவும் நம் கண்ணில் படும். பெரும்பாலும் நாம் அவற்றை ஒதுக்கிவிடுவோம். இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. இப்படி நம்முடைய தேடுதல் இருக்கிறது என்று புரிதல் இருந்தால், அவற்றையும் குறித்துக் கொண்டு பின் நம்முடைய முதன்மைத் தேடலில் ஈடுபடலாம். சமீபத்தில் நான் கண்ட பேருண்டப் பறவையைப் பற்றித் தேடிக் கொண்டிருந்தபோது அப்படி ஒதுக்கி வைத்த ஒன்று மிகச் சிறப்பானது எனப் பிறகு புரிந்து கொண்டேன்.

அழகிய நுட்பமான மரச் சிற்பங்களுடைய முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட இலங்கையில் உள்ள ஒரு கோயில் மண்டபத்தை தற்செயலாக இணையத்தின் வழிக் கண்டடைந்தேன். இது கண்டி நகருக்கு அருகில் எம்பக்கே என்னும் ஊரில் எம்பக்கே கோயில்(Embekke Devalaya) என அழைக்கப்படுகிறது. இது 14ம் நூற்றாண்டில் மூன்றாம் விஜயபாகு மன்னனால் கட்டப்பட்ட ஆறுமுகன் கோயில். 18ம் நூற்றாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது. இதன் சிறப்புகளுக்காகவே இது யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Woodcarving of Rishaba Kunjaram  at Embekke Devalaya- Sri Lanka,
Photo credit: Wikipedia





















அங்குள்ள இந்த மரச் சிற்பத்தின் புகைப்படங்களைப் பார்த்தபோது, இது சற்று சிதைந்து இருந்ததாலும், இதை விடச் சிறப்பான பிற சிற்பங்களின் படங்கள் கண்ணில் பட்டதால், இதற்கு அதிகம் கவனம் கொடுக்கவில்லை.

ஞாயிறு, 5 மே, 2024

கண்ட பேருண்டம்

ஒரு நகை, ஒரு புடவை, ரஷ்யப் பேரரசு, கோயில் வாகனம், மைசூர் அரசு, ஒரு சாமான்யன் கூறிய கதை, கர்நாடக அரசு, அல்பேனியா நாடு, நான் நேரில் பார்த்த ஒரு சிற்பம் ஆகியவற்றில் ஒரு பொது அம்சம் இருக்கிறது எனக் கூறினால் அதை உங்களால் நம்ப முடியுமா? அந்த பொது அம்சம் என்ன? அது இரு தலைகளையுடைய ஒரு கற்பனைப் பறவை என்று கூறினால் நம்ப முடிகிறதா?

படம் 1  : பெங்களூர் ஆலய தூண் சிற்பம்


 









 



மேலே உள்ள இந்த சிற்பம் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஒரு தூணில் உள்ளது. கர்நாடகத்தில் “கண்ட பேருண்டா”(Gandaberunda) எனப்படுகிறது. மற்ற இடங்களில் கண்ட பேருண்டம், கண்ட பேருண்டப் பட்சி(பறவை), இரு தலைப் பறவை, இரு தலைப் புள், இரு தலைக் கழுகு, அண்ட ரெண்ட பட்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியக் கோயில்களில் எத்தனையோ கற்பனை விலங்குகளின் சிற்பங்கள் இருக்கும்போது இதில் என்ன புதுமை என்ற கேள்வி எழுந்தது. புதுமை இந்தச் சிற்பத்தின் அமைப்பிலும், அது நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லும் தகவல்களிலும் உள்ளது.

செவ்வாய், 26 மார்ச், 2024

சிற்பத்தில் அசைவுகள் - 1

குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பது சதாரணம். குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பதை கற்சிற்பமாக வடிப்பது அசாதரணமே!

சில சமயங்களில் கோயில்களில் மிக வினோதமான சிற்பங்கள் கண்ணில் படுவதுண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவற்றை உருவாக்கிய சிற்பியின் குறும்புத்தனமும், படைப்பாற்றலும் அதன் மூலம் அவர் நமக்கு விடும் சவால்களும் வியப்பானவை.

அப்படிப்பட்ட சில சிற்பங்களை நான் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் பார்த்தேன்.  புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தன அவை!















கோயில் மண்டபத்தின் ஒரு தூணின் மேல் பகுதியில் இந்தச் சிற்பத்தை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதைப் புகைப்படம் எடுத்து பெரிதுபடுத்திப் பார்த்தேன்.

திங்கள், 11 செப்டம்பர், 2023

சிலையும் அதன் தலையும்

ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கலைஞர், நம்மில் ஒரு தாக்கத்தை இன்று  ஏற்படுத்துவார் என்றால் அவர் எப்படிப் பட்டவராயிருக்க வேண்டும். அவரது படைப்பு எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும்!

நான் கூறுவது இந்த ஒரு எளிய சிற்பத்தைப் பற்றியே!