தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

திங்கள், 25 செப்டம்பர், 2023

கோயில் பராமரிப்பு

முக்கியமான கோயில்கள் மற்றும் கோயில் மரபு பற்றிய நூல்களில்பாலும் ஏடும் போல கோயில்கள் தகவல்களுடன் கல்வெட்டுக்களின் தகவல்களும் இருக்கும்.  சில சமயம் அந்த கோயிலைக் கட்டிய/விரிவுபடுத்திய/திருப்பணி  செய்த அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார்  செய்த பணிகள் பற்றிய விவரங்களும் காணப்படும்.

சில சமயங்களில்  கோயில் பராமரிப்புக்கு  அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார் கொடுத்துள்ள தானங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.

உதாரணம் :

"சாலிவாகன சக ௵ (அதாவது ஆங்கில வருடம் 1799) க்கு சரியான தாத்ரு ௵ ஆனி ௴11௳ யில் திரு அரசமாநகரத்திலெழுந்தருளியிரா நின்ற ஶ்ரீசோமேஸ்வர சுவாமியின் கார்த்திகைவுச்சவத்துக்காக பென்சன் சராங்கு சதுப்பேரி சபாபதி முதலியார் வைத்த வீடு தற்மம்"

இது அல்சூர் சோமேஸ்வரர்  கோயிலுக்கு தனியார் ஒருவர் ஓரு வீட்டைத் தர்மமாக எழுதி வைத்த கல்வெட்டு.

வியாழன், 14 செப்டம்பர், 2023

A sculpture and its headcover

After death,  only few are remembered forever.  Few examples are Mahatma Gandhi(1869-1948) and The Buddha (563 BCE - 483 BCE or 480 BCE - 400 BCE).  How about an artist who lived about 600years ago and whose name we don’t even know? If he has to leave a strong impression on us  even today,  how great his creation could be?

I am referring to this simple sculpture!    











திங்கள், 11 செப்டம்பர், 2023

சிலையும் அதன் தலையும்

ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கலைஞர், நம்மில் ஒரு தாக்கத்தை இன்று  ஏற்படுத்துவார் என்றால் அவர் எப்படிப் பட்டவராயிருக்க வேண்டும். அவரது படைப்பு எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும்!

நான் கூறுவது இந்த ஒரு எளிய சிற்பத்தைப் பற்றியே!