தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

வியாழன், 2 நவம்பர், 2023

Maintenance of a Temple - Part 2

Part 1 covered  the evolution of the temple’s exteriors as seen through photographs from years 1890 to 2023!

This Part 2 covers other changes carried out  in the temple.


 Changes in the flooring of the temple enclosure

While  going through some old photographs I have  noticed changes in the  flooring of the temple enclosures.  It is a normal practice to leave the flooring between the buildings within the temple with properly levelled mud or grass.  Since there are few trees in the middle of  the enclosure even now,  we  can  assume the flooring was originally  left with mud.  

 


An information board made in a stone slab can be seen in the temple premises. It is dated 12 June 1994. It conveys Shrimati K. J. Pramila Thammana of Vijayanagara has  sponsored the work of laying the stone slabs for the flooring. What a  noble  gesture!.  It is a huge surface area too be covered.  So happy to see  the concept of such noble donations continued even in 20th century.

Maintenance of a Temple - Part 1

Once upon a time Bangalore was known as “Pensioner’s Paradise”.  Later it is was known as “Garden City”.  Now,  the Paradise is gone,  the Garden is going and  is getting replaced as “Silicon City”! 

Strengthening Bangalore’s reputation of Pensioners paradise,  there is a mention of a pensioner in a stone inscription in the  year 1799 itself.  And this stone inscription is documented in the  Epigraphia carnatica Vol 9, compiled by Benjamin Lewis Rice, the Director of the Mysore Archaeological Department and released  between 1894 and 1905.

In this inscription referenced as “Bn – 15”,  Sarangu Sadupperi Sabhapati mudaliyar who identifies himself as a pensioner has  donated his  house to Ulsoor Sri Someshwara Temple.  Probably he was a government employee under British  India and got retired from the services. 

திங்கள், 25 செப்டம்பர், 2023

கோயில் பராமரிப்பு

முக்கியமான கோயில்கள் மற்றும் கோயில் மரபு பற்றிய நூல்களில்பாலும் ஏடும் போல கோயில்கள் தகவல்களுடன் கல்வெட்டுக்களின் தகவல்களும் இருக்கும்.  சில சமயம் அந்த கோயிலைக் கட்டிய/விரிவுபடுத்திய/திருப்பணி  செய்த அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார்  செய்த பணிகள் பற்றிய விவரங்களும் காணப்படும்.

சில சமயங்களில்  கோயில் பராமரிப்புக்கு  அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார் கொடுத்துள்ள தானங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.

உதாரணம் :

"சாலிவாகன சக ௵ (அதாவது ஆங்கில வருடம் 1799) க்கு சரியான தாத்ரு ௵ ஆனி ௴11௳ யில் திரு அரசமாநகரத்திலெழுந்தருளியிரா நின்ற ஶ்ரீசோமேஸ்வர சுவாமியின் கார்த்திகைவுச்சவத்துக்காக பென்சன் சராங்கு சதுப்பேரி சபாபதி முதலியார் வைத்த வீடு தற்மம்"

இது அல்சூர் சோமேஸ்வரர்  கோயிலுக்கு தனியார் ஒருவர் ஓரு வீட்டைத் தர்மமாக எழுதி வைத்த கல்வெட்டு.

வியாழன், 14 செப்டம்பர், 2023

A sculpture and its headcover

After death,  only few are remembered forever.  Few examples are Mahatma Gandhi(1869-1948) and The Buddha (563 BCE - 483 BCE or 480 BCE - 400 BCE).  How about an artist who lived about 600years ago and whose name we don’t even know? If he has to leave a strong impression on us  even today,  how great his creation could be?

I am referring to this simple sculpture!    











திங்கள், 11 செப்டம்பர், 2023

சிலையும் அதன் தலையும்

ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கலைஞர், நம்மில் ஒரு தாக்கத்தை இன்று  ஏற்படுத்துவார் என்றால் அவர் எப்படிப் பட்டவராயிருக்க வேண்டும். அவரது படைப்பு எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும்!

நான் கூறுவது இந்த ஒரு எளிய சிற்பத்தைப் பற்றியே! 
















வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பர்மா வழி நடைப் பயணம் - புத்தக வாசிப்பனுபவம் – பகுதி #2

முதல் பகுதியின் தொடர்ச்சி

வரலாற்றுக் குறிப்புகள்:

இந்த நூலில் சாமிநாத சர்மா அவர்கள்,  பயணத்தில் அவர் கடந்த இடங்களின் பெயர்கள்,  அவற்றின் சிறப்பு, அவர் சந்தித்தவர்களின் சிறப்பு, சமுகத்தில் உள்ள தொண்டு அமைப்புகள் என பல முக்கிய தகவல்களைக் கொடுக்கிறார். தற்போது Pyay எனப்படும்,  புரோம்  நகரத்தைப் பற்றி ஓரு வரலாற்றுச் சித்திரத்தை நமக்கு  கொடுக்கிறார்.   

புரோம் நகரம்,  கிறிஸ்து சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தி,  பர்மாவின் தலைநகரமாயிருந்ததாகவும்,  கி.பி. எட்டாவது நூற்றாண்டில் ‘தலெய்ங்’ என்ற ஒரு இனத்தவர் இதனை அழித்துவிட்டனர் என்றும், அந்த அழிவின் மீதுதான் புதிய புரோம் நகரம் ஏற்பட்டது என்றும் சிறப்பு வாய்ந்த இரண்டு புத்தர் கோயில்கள் இங்கு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் நாள் பயணத்தில் லெட்படான் (Letpadan)  என்ற ஊருக்கு போகிறார்.  அங்குள்ள நகரத்தார் மடத்தில்  தங்கி கையில் கொண்டு வந்திருந்த உணவை உட்கொண்டு சிறிது நேரம் களைப்பாறினர்கள்.  மடத்துக் காரியக்காரர்கள், அவர் குழுவுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார்கள்.  அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் என்கிறார்.  

நாட்டுக்கோட்டை நகரத்தார்  பர்மாவில் தாங்கள் லேவாதேவித் தொழில் செய்து வந்த முக்கியமான எல்லா ஊர்களிலும் மடங்களும், கோயில்களும், நந்தவனங்களும் அமைத்து இருந்தனர்;  சில கோயில்களுக்கு வெள்ளி ரதங்கள், தங்க வாகனங்கள் செய்ந்திருந்தனர் எனக்  கூறுகிறார்.   மடங்கள் நூற்றுக்கணக்கான பேர் வசதியாகத் தங்கக் கூடிய வகையில் அமைக்க பட்டிருந்ததையும். சில மடங்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளும் இருந்ததையுமான   நகரத்தாரின்  சமூகப் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார். 

பர்மா வழி நடைப் பயணம் - புத்தக வாசிப்பனுபவம் – பகுதி #1

 பர்மா வழி நடைப் பயணம் .

ஆசிரியர்:  வெ. சாமிநாத சர்மா.

 பண்டைக் காலங்களில்   பாண்டிய,  சோழ ஆட்சி காலங்களிருந்து தமிழத்துக்கும்  பர்மாவுக்கும்  (தற்போது மியான்மார்) வணிகத் தொடர்பு இருந்து இருக்கிறது.  இந்தியாவின்  பிற பகுதிகளிலிருந்தும் தொடர்பு இருந்து இருக்கிறது.  1824ல் இருந்து ஆங்கிலேயர்களுக்கும் பர்மாவுக்கும் மூன்று போர்கள் நடந்தன.   1886ல் முழு பர்மாவும்,   ஆங்கிலேயர்(பிரிட்டிஷ்) ஆட்சியின் கீழ் வந்தது.  அங்கு அரசு அலுவலங்கள்,  தொழிற்சாலைகள்,  தோட்டங்கள்,  பராமரிப்பு,  சாலைப் பணி,  துறைமுகப் பணி மற்றும் இன்ன பிற பணிகளுக்காக   ஆங்கிலேய அரசு இந்தியர்களை பர்மாவிற்கு போக ஆதரித்துக்  கொண்டிருந்தது

1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஏறத்தாழ 10லட்சம் இந்தியர்கள்  பர்மாவில் இருந்தனர்.  அவர்களில்  4லட்சம் பேர் பர்மாவிலேயே பிறந்தவர்கள்!

வெ. சாமிநாத சர்மா, இலக்கியத்திலும், பத்திரிக்கை துறையிலும் ஈடுபாடு உள்ளவர், செய்யும் பணியில் மிகச் சித்தை உள்ளவர், எல்லோருக்கும் இனியவர்.    1932க்கு  பர்மா சென்றார்.  பத்திரிக்கைத் துறை, நூலாக்கம், சொற்பொழிவு என ஆக்கம் மிகுந்தவர்.   அவருடைய படைப்புகள் மற்றும் ஆளுமை மூலம் பர்மிய தமிழ் மக்களிடையே மதிப்பு பெற்றவர்.