முதலில் செய்தி: ஜுன் 29, 2009: மேடாஃப் (Madoff) 150 வருட சிறை தண்டணை விதிக்கப் பெற்றார். சரி இப்போ இவரோட கதையை பார்க்கலாம். நம்ம ஊருல, வங்கிகள் 8% வட்டி கொடுக்கும் போது தனியார் நிதி நிறுவன்ங்கள் 20%,40% விளம்பரம் பண்ணுனப்போ, நம்ம மக்கள், பணத்தைக் கொண்டு போய் கொட்டி அசலே இல்லாம ஏமாந்ததை கொஞ்சம் ஃப்ளாஸ்பேக் (flashback) கில் யோசிச்சுப் பாருங்க. இந்தக் கதையும் ஓரளவுக்கு அது மாதிரிதான்.
இந்தியாவுல வங்கிகளில் 7% முதல் 11% வரைக்கும், சுலபமா வட்டி கிடைக்கும்(fixed depositகளுக்கு). அமெரிக்காவில 4% கிடைக்கறதே ரொம்ம கஷ்டம். நம்ம அண்ணாச்சி மேடாஃப் என் கிட்ட பணத்தை கொடுங்க, நான் உங்களுக்கு நிறய திருப்பிக் கொடுக்கிறேன்னு சொன்னதும், மக்கள் பணத்தைக் போட்டுருக்காங்க. அண்ணாச்சி, பங்கு சந்தை வியாபாரம், வளத்தை பெருக்குவதற்கு ஆலோசனை அப்படின்னு நெறய மக்கள் சேவை(!?) பண்ணியிருக்காரு. ஓரு காலத்துக்கு மேல வண்டி ஓட்ட முடியல. அவராவே வந்து நான் மோசடி பண்ணிட்டேன்னு சொன்னாரு. அப்புறம் என்ன? போலிஸ் கைது பண்ணி, கூண்டுல நிறுத்திட்டாங்க. இது எப்ப நடந்ததுன்னு கேட்கிறீங்களா?. சும்மா, இப்பதான் பக்கமா, நாலு மாசத்துக்கு முன்னாடி, மார்ச் 2009 ல. பண மோசடி கோடிக் கணக்குல இருக்குது.
இந்தியாவுல, சத்தியம் கம்பூயுட்டர்(Satyam Computers), தலைவர் ராமலிங்க ராஜு, கோடிக் கணக்கில மோசடி பண்ணுனதா ஜனவரி 2009ல அவரே ஒத்துக்கிட்டப்ப, மாநில போலிசா, மத்தியப் போலிசா, செபியா(SEBI) இவர்கிட்ட விசாரணை பண்றதுன்னு ஆராய்ச்சி நடக்குது. போனப் போவுதுன்னு அவரே போலிஸ்ல சரணடைஞ்சாரு.
எப்ப போலிஸ் விசாரணை முடியறது, எப்ப நீதி மன்றத்துல வழக்கு வர்றது, எப்ப தீர்ப்பு வர்றது? அடப் போங்கப்பா, அடுத்த ஜென்மன்னு ஓண்ணு இருந்தா அதுல பார்த்துக்கலாம்.