சமீபத்தில் பேப்பரில் ஒரு விபத்து பற்றி படித்தேன். இதைப் படித்தபோது, சுஜாதாவின் "விருப்பமில்லாத திருப்பங்கள்" நாவல் நினைவுக்கு வந்தது. இதன் கதாநாயகன், ஏழையாக இருந்தாலும், மிகவும் தன்னம்பிக்கையானவன். எதையாவது முயற்சி செய்து கொண்டேயிருப்பான். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பான். சில விருப்பமில்லாத திருப்பங்களால், கையை இழந்து, மிகவும் முயற்சித்த வேலை வாய்ப்பும் கை நழுவிப் போகும். திரும்பவும் அவனது முயற்சிகளைப் பற்றிய கதை இது.
சரி விபத்துக்கு வருவோம். கொல்கத்தாவில், ஓரு மினி பஸ், மேலே பாலத்தில் இருந்து, மிகவும் அதிகம் பயன்பாட்டில் உள்ள (Howrah station) பிளாட்பார்ம் 11,12 ரயில் பாதைகளின் மேலே விழுந்தது. இதில் 10க்கும் அதிகமானவர் உயிர் போயிற்று. மற்றவர்கள் மருத்துவமணைகளில். மினி பஸ் ஓட்டுனர் இன்னொருவருடன் வேகப் பந்தயமிட்டதில் இந்த விபத்து என்று சந்தேகிக்கப் படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது.
திருப்பம் 1. இரண்டு வண்டி ஓட்டுனர்களுக்கும், யார் வேகமாக பாலத்தைக் கடக்க இயலும் என்ற வேகப் பந்தய(race) ஆசை வருகிறது.
திருப்பம் 2. ஓரு வண்டி, கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி, கிழேயுள்ள, ரயில் தண்டவாளங்களின் மேலே விழுகிறது.
திருப்பம் 3. வண்டியில் இருந்தவர்கள், காலையில் எழுந்திருக்கும் போது, மருத்துவமணைக்குப் போகத் திட்டமிடவில்லை. அவர்களது அன்றைய மற்றும் முந்தைய நாட்களின் திட்டங்கள் பாதிக்கப் பட்டன.
திருப்பம் 4. விபத்துக்குள்ளானவர்களின், கூக்குரல் கேட்டு, ரயிலுக்குக் காத்திருந்தோர், ஓடி வந்து உதவி செய்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு, இந்த தாமதத்தால் பாதிப்போ!
திருப்பம் 5. டாக்டர்களும், நர்சுகளும், அன்றைய வேலையை முடித்துவிட்டு வீடு மற்றும் சொந்த கிளினிக் திரும்ப நினைத்த அவர்கள், மருத்துவமணையிலேயே அதிக நேரம் தங்க வேண்டிவந்து இருக்கும். இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டனரோ
திருப்பம் 6. பிளாட்பார்ம் 11,12ல் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மட்டுமல்ல, Howrah (ஹௌரா) ஸ்டேசனிலிருந்து புறப்பட வேண்டிய பெரும்பாலானா ரயில்கள் தாமதமாயின. இதனால் எத்தனை பேர் அவதிப் பட்டனரோ. எத்தனை பேர், அவர்களது அடுத்த ரயிலைப் பிடிக்க முடியாமல் போயிற்றோ.
திருப்பம் 7. இவ்விபத்தில், உயிர் இழந்தவர்களது, குடும்பத்தின் பொருளாதார இழப்பு, அவர்களது சமூகப் பாதுகாப்பு(social security), குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.
திருப்பம் 8. இவ்விபத்தில் காயம் அடைந்தோர், எத்தனை நாட்கள் மருத்துவமணையில் இருக்க வேண்டி வருமோ. எதிர் பாரத பணத்தேவைக்கு எங்கே போவது. மருத்துவமணைக்கும் வீட்டுக்கும் அலைய வேண்டிய அதிக வேலைச்சுமை அவர்களது குடும்பத்தினர்க்கு.
திருப்பம் 9. வேகப் பந்தயதில் ஈடுபட்ட இன்னோரு வண்டியின் ஒட்டுனரைத் போலிஸார் தேடி வருகிறார்கள். பாதுகாப்புப் பணி இதனால் பாதிக்கப் பட்டு, எத்தனை குற்றங்கள் நடந்தனவோ.
இப்படி மேலும் பல மறைமுகப் பாதிப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
Accident happens in seconds. It impacts the life forever.
கருத்து கந்தசாமி
பைக், கார், சின்ன வண்டி, பெரிய வண்டி ஓட்டுனர்களே: மேலே போகணும்னு வீட்ல சொல்லிட்டு வந்தீட்டீங்கன்னா, நீங்க மட்டும் மேல போங்க. எங்களையும் கூப்பிட்டுக்கிட்டு போற பேராசையெல்லாம் வேண்டாம். தயவு செய்து, பொறுப்பா வண்டி ஓட்டுங்க. விபத்துக்குபின், எலும்பு முறிவுக்கு, பிஸியோ தெரபி(physiotheraphy) எடுக்கும் ஒருவரை ஒரு தரம் பாருங்கள். விபத்துக்கு காரணமானவர் மேல கொலை வெறியில் இருப்பார். விபத்தில் முதுகுத்தண்டு பாதிப்பால், வாழ்க்கை முழுவதும் படுக்கையிலேயே தள்ளப் பட்டவர்களைப் பற்றி கேள்விப் பட்டதில்லையா?
For the original News Item, Click here: timesofindia News Item