
அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
கருத்து கந்தசாமி
பரிச்சையில கிடைக்கிற மார்க்கைவிட, வாழ்க்கையை எவ்வளவு புத்திசாலித்தனமா அணுகறோம்கரது மிக முக்கியம். நம்ம நாட்டிலயும் ஏன் உலகத்திலயும் எத்தனயோ படிக்காத மேதைகள் இல்லையா?. சரி, எல்லாரும் மேதையாயிட்டா, ரொம்ம போர் அடிக்கும். அதனால, கொஞ்சம் புத்திசாலித்தனமும், நெறய தன்னம்பிக்கையும் இருந்த போதும். தாரளமா சந்தோசமா வாழலாமே?. இத எப்பத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது?
For the original News Item, Click here: http://www.efytimes.com/efytimes/fullnews.asp?edid=35382