பூனை குட்டி போட்டால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். முதலில் குட்டிகளின் சப்தம் மாத்திரம் கேட்கும். பூனை அதி புத்திசாலி. உயரமான பரண், உயரமாக அடுக்கியுள்ள மூட்டைகள், வைக்கோல் போருக்கு கீழே என எங்களுக்கு எட்டாத இடங்களில் குட்டி போடும்.
நாம் என்ன இளைத்தவர்களா? பூனையில்லாத நேரம் பார்த்து, நாங்கள் குட்டிகளை வீட்டிற்குள் விட்டு விடுவோம். சில நாட்களுக்கு பூனை நம்மை குட்டிகளை அணுக விடாது. அப்போது பூனை இல்லாத சமயங்களில் குட்டிகளை கொஞ்சி விளையாடுவோம்.
நாம் என்ன இளைத்தவர்களா? பூனையில்லாத நேரம் பார்த்து, நாங்கள் குட்டிகளை வீட்டிற்குள் விட்டு விடுவோம். சில நாட்களுக்கு பூனை நம்மை குட்டிகளை அணுக விடாது. அப்போது பூனை இல்லாத சமயங்களில் குட்டிகளை கொஞ்சி விளையாடுவோம்.
எங்களில் யாருக்கு எந்த குட்டி என்று சண்டை வரும். பாட்டிக்குத் தெரியாமல் அவைகளுக்கு அதிகமாகப் பால் கொடுப்பது சுவாரஸ்யமானது. பஞ்சு பஞ்சாக இருக்கும் அந்தக் குட்டிகளைக் கொஞ்சும் சுகமே அலாதியானது.
ஆனாலும் நிறைய பூனை குட்டிகளை வீட்டில் வைத்திருக்க முடியாததால், அவைகளைப் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும். தெரிந்தவர்களுக்கு கொடுத்த பின், சில சமயம், எங்கள் நச்சரிப்புத் தாளாமல், பாட்டி ரொம்ம பெரிய மனசு பண்ணி ஒரு குட்டியை வைத்துக் கொள்ள விடுவார். அது வளர்ந்து பெரியதாகும் வரை நமக்குக் கொண்டாடம். பின்னால் அது நம்மைக் கண்டு கொள்ளாது. இருந்தாலும் என்ன, பூனையென்றால் குட்டி போடத்தானே செய்யும். அப்போது எங்கள் பூனைக் குட்டிகள் உறவாடல் திரும்ப ஆரம்பித்து விடும்.
நகரத்திற்கு சென்ற பின், பூனை வளர்க்க இடமும், நேரமும் இல்லாமல் போயிற்று. பெங்களுர் சென்ற பின், பூனை வளர்க்கும் அளவுக்கு, கொஞ்சம் பெரிய வீடாக கிடைத்தது. எங்கு போய் குட்டியைத் தோடுவது என்று தயக்கம். அதிர்ஷ்ட வசமாக, ஒரு பூனை அதன் குட்டியை எங்களது மாடியில் விட்டு விட்டது. தானாக வந்த பூனை குட்டியுடன், எங்களது குதுகாலமன நாட்கள் ஆரம்பமாயின.
பூனையிடம் பந்து மற்றும் நூல்கண்டைக் கொடுத்து விட்டு, பூனை அவைகளை உருட்டி விளையாடுவதைப் பார்ப்பது வித்தியாசமான பொழுது போக்கு. பூனை எங்கள் வீட்டின் ஓரு உறுப்பினர் ஆயிற்று. நாங்கள் வெளியூர் போவதாயிருந்தால் தெரிந்தவர்களிடம் சொல்லி பூனைக்கு சாதத்திற்கும் பாலுக்கும் ஏற்பாடு செய்வது எங்கள் முக்கிய கடமையாயிற்று.
நீங்களும் ஒரு பூனை வளர்த்துப் பாருங்களேன்!.