போன மாசம் மே 22ந் தேதி, டெல்லியில் CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து இருக்கு. நம்ம தம்பி சித்தாந் சிங்(18 வயசு), எதிர்பார்த்த மார்க்கைவிட கம்மியா வாங்கியிருக்கிறார். வீட்டுல கோபிச்சுக்குவாங்கன்னு பயந்து போய், வீட்டை விட்டு காணம போய்ட்டாரு. ஒரு மாசம தேடியும், எங்கியும் கிடக்கலை. ஒரு நல்ல நாள்ல, சித்தாந் அவரோட நண்பரோட ஆர்குட்(Orkut) அக்கவுண்டுல scarp போட்டுயிருக்காரு. (ஆர்குட் கூகுளை சார்ந்தது).
அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
வியாழன், 25 ஜூன், 2009
வெள்ளி, 19 ஜூன், 2009
வேலூர் பொற்கோயிலும் மற்ற கற்கோயில்களும்
கோயில் என்றவுடன் எனக்கு எங்கள் ஊரில் இருக்கும் முனீஸ்வரன் கோயில் நினைவுக்கு வருகிறது. அழகான திருமணிமுத்தாற்றின் கரையில் ஐந்து ஏக்கர் பரப்பில் ஈஸ்வரன், அம்மன், கருப்பண்ண சாமி சன்னதிகளை உடைய எளிமையான கோயில் இது. ஈஸ்வரன் சன்னதிக்கு மேலே கூரை எதுவும் இல்லை. சாமி கூரை எதுவும் போடக் கூடாது என்று கூறியதாக மக்களின் நம்பிக்கை. சில பூச் செடிகள், மரங்கள், கிணறு முதலியவையும் உள்ளது. சாமி கும்பிடுவது முதல் வேலை. அடுத்த ஈர்ப்பு அங்கு வைத்துக் கொள்ளும் சந்தனம். சந்தனம் அரைக்கும் மேடையும் அதன் மேல் உள்ள சந்தனக் கட்டையும் கோவிலுக்கு எங்களை ஈர்க்கும் காந்தமாகும்.
வெள்ளி, 5 ஜூன், 2009
பூனைகள் - எனது இனிய நினைவுகள்
பூனை, நாய், ஆடு முதலியவற்றை செல்லப் பிராணிகளாகப் பெற்ற அதிர்ஷடசாலி நான். கிராமத்தில் பொதுவாக எல்லா வீடுகளிலும் பூனை வளர்ப்பார்கள். இதன் முக்கிய நோக்கம் பூனை மேலுல்ல அன்பு அல்ல. பூனையவிட்டு எலி பிடிப்பது ஆகும். பெண் பூனைகள் ரெகுலராக குட்டி போட்டு விடும். குட்டிகளுக்கு புதிய சொந்தக்காரர்களை கண்டு பிடுப்பது கொஞ்சம் கடினமான வேலை. இதனாலெயே பெண் பூனகளை அதிகம் வைத்திருக்க மாட்டார்கள். எங்க பாட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். ஆண் பூனை வீட்டில் அதிகம் இருக்காது, காணமல் போய் விடும் என்பதால் பெண் பூனைகளையே வளர்ப்பார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)