நான் பல்வேறு வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கை அனுபவ நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்துள்ளேன். அவற்றிலிருந்து வேறுபட்டு தமிழில் அரிதாக சமகாலத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு வாழ்க்கை அனுபவ நூலை அண்மையில் படிக்க நேரிட்டது. குடும்பச் சூழ்நிலைகளால் ஐந்தாவது வரை மட்டுமே படித்துள்ள ஆசிரியர், பின்னர் கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் நிறைய நூல்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்பழக்கம் எழுத்தாளர் கி. ராஜநாராயணனைச் சந்திக்க வழிவகுத்தது. கி.ரா. அவர்களின் ஊக்கமும் வழிகாட்டலும் அவருக்கு அதன் மூலம் கிடைத்தது. பல சிறுகதைகள், நாவல்களை கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவரது இளம்பிராயத்து நினைவுகளை ”நிலாக்கள் தூர தூரமாய் ” என்ற நூலாக எழுதியுள்ளார். இதனை எழுத்தாளர் சைதன்யா ஜெயமோகன் ஆங்கிலத்தில் Moons far far away என்ற தலைப்பில் மொழிபெயர்த்து மானசா பதிப்பகத்தின் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது.
என்னுடைய வாசிப்பனுபவத்தை இங்கே படிக்கலாம்.
எழுத்தாளர் பாரததேவியைப் பற்றிய விவரங்களை இங்கே படிக்கலாம்